சிரியாவில் வன்முறை அதிகரிப்பு

Posted: மார்ச் 23, 2012 in MUSLIM WORLD

syria-women

சிரிய அரச படையினர் அந்நாட்டின் எதிர்ப்பு போராட்ட பிரதேசங்களில் வன்முறையை அதிகரித்துள்ளனர். வடமேற்குப் பிரதேசத்தில் புதிதாக பலர் தாக்கப்பட்டுள்ளனர். மத்திய சிரியாவிலும் இயந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக மக்கள் சுடப்பட்டுள்ளனர்.இதேவேளை ரஷ்யா சிரிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டுள்ளது. அந்நாடு சிரியாவுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்துள்ள நிலையில், இது கவனத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

இதுவரை 9100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புப் போராளிகள் சிறியளவிலான ஆயுதங்களுடனேயே போராடி வருகின்றனர். ஆனால், அரச தரப்பினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இராணுவத்தினர் தினமும் வீடுகளுக்குள் நுழைந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனர். இதில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தாங்கிகளும் எறிகணைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகமும் சிரியாவில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்படுபவருமான கொபி அனான், அந்நாட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை ஐ.நா. சபை சிரியாவில் மோதல் தவிர்ப்பை ஏற்படுத்தி, ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துமாறு வேண்டியுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s