கூடங்குளம் நோக்கி தடையை மீறி செல்ல முயன்ற ,பாப்புலர் ஃப்ரண்ட் பைசல் உட்பட பலர் கைது.

Posted: மார்ச் 27, 2012 in POPULAR FRONT

கூடங்குளம் நோக்கி பேரணி
பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது வைகோவுடன் நெல்லை முபாரக்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இடிந்தகரையில அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் இடிந்தகரை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

March toward kutankulam
SDPI  மாநில செயலாளர் அப்துல் ஹமீத் உரை ஆற்றிய பொழுது

அதன்படி பாளை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் , ,SDPI பொது செயலாளர் நெல்லை முபாரக் ,செயலார் அப்துல் ஹமீத் , பா.ம.க. வியனரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலார் பைசல் அஹ்மத் ,மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன் ,

சீமான் உரை ஆற்றிய பொழுது
SDPI மாவட்ட தலைவர் சாகுல்  ஹமீத் உஸ்மானி ,தமு மு க மாவட்ட தலைவர் மைதீன் பாரூக் ,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் ,தமிழ் தேசிய விடுதலை இயக்கம் கட்சி தியாகு ,மே.17 இயக்கம் திருமுருகன், அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன்கோமஸ், காஞ்சி மக்கள் மன்றம் மகேஷ், தமிழர் தேசிய பொது உடைமை கட்சி மணியரசன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் அதியமான், புரட்சிகர இளைஞர் முன்னணிபெரியார்பித்தன், லெனின் கம்யூனிஸ்ட் சங்கர பாண்டியன், பேராசிரியர் தொ.பரமசிவம், நாகை திருவள்ளுவன் மேலும் பல கட்சிகளை சேர்ந்த மாநில ,மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
March toward kutankulam
SDPI தொண்டர்கள் பலர் கலந்து கொண்ட பொழுது
கூடங்குளம் நோக்கி பேரணி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலார் பைசல் அஹ்மத்அவர்கள் உரை ஆற்றிய பொழுது

ஆர்ப்பாட்டம் நடந்த மார்க்கெட் திடலில் ரஷ்யா நாட்டில் நடந்த அணுஉலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் அடங்கிய 300 அடிநீள பேனரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிடித்தபடி நின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து வாசக்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் தமிழக அதிவிரைவுப்படை, சிறப்பு காவல்படை, சிறப்பு அதிரடிப்படை, நெல்லை மாநகர போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது, நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் மற்றும் துணை ராணுவப்படைகளை வாபஸ் பெறவேண்டும், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன.
POPULAR FRONT OF INDIA
மதிமுக தலைவர் வைகோ வுடன் நெல்லை முபாரக்
SDPI kutankulam to support
POPULAR FRONT OF INDAI SUPPORT FOR KOODANGULAM PROJECT
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அதில் கலந்து கொண்ட அனைவரும் வைகோ தலைமையில் ,நெல்லை முபாரக் ,சீமான் ,கொளத்தூர் மணி ,மேலும் பல கட்சிகளை சேர்ந்த பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுடன் ஆயிரத்திற்கு மேற்பட்டோரை  கைது செய்தனர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s