கனடா முஸ்லிம்கள்

Posted: மார்ச் 31, 2012 in MUSLIM WORLD

tariq-masjid

கனடா வடஅமெரிக்காவிலுள்ள விசாலமான நாடு. கைத்தொழில், கல்வித் துறைகளில் மிக வேகமாக முன்னேறி வரும் நாடு. ஐக்கிய அமெரிக்காவை விட பரப்பளவில் பெரியதாயினும் சனத்தொகையில் சிறியது. இஸ்லாம் கொலம்பஸின் வருகைக்கு முன்பே அமெரிக்கக் கண்டத்தில் அறிமுகமாகியுள்ளது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டனர். எனவே இக்கண்டத்தோடு முஸ்லிம்களின் தொடர்பு மிகவும் தொன்மைமிக்கது.

எவ்வாறாயினும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கனடாவில் முஸ்லிம்கள் கணிசமானளவு குடியேறினர். வரலாற்று ஆய்வுகளின் படி ஸ்கொட்லாந்திலிருந்து கனேடிய நகரான ஒன்டாரியோவுக்கு குடிபெயர்ந்த இளம் ஜோடி யொன்றின் வருகையுடன் கனேடிய முஸ்லிம் வரலாறு துவங்குகின்றது. இந்தக் குடும்பமும் பின்னொரு குடும்பமும் இணைந்தே கனேடிய முஸ்லிம் சமூகம் பரிணாமம் பெற்றது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்பேனியா, பொஸ்னியா, துருக்கி, சிரியா போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் கனடாவுக்கு வந்து குடியேறினர். அறபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பின்னர் சிரியா, பலஸ்தீன், லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையான முஸ்லிம்கள் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தனர். 1960 களில் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும், 1970 களில் கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

1960 களில் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியேற்றக் கொள்கையின் விளைவாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் இங்கு குடியேறும் வாய்ப்பு ஏற்பட்டது. 1871 இல் இரு குடும்பங்களாக இருந்த முஸ்லிம்கள் 1951 இல் 1800 பேராகவும், 1961 இல் 5800 பேராகவும், 1971 இல் 33430 பேராகவும், 1981 இல் 98165 பேராகவும் இருந்தனர். 2011 ஆம் ஆண்டின் குடித்தொகை கணிப்பீட்டின்படி கனேடிய முஸ்லிம்களின் தொகை 940,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த கனேடிய சனத்தொகையில் 2.8 வீதமாகும்.

அடுத்த 20 ஆண்டுகளில் கனேடிய முஸ்லிம்களின் எண்ணிக்கையிலும் வீதாசாரத்திலும் பெரும் வெடிப்பு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சனத்தொகையின் அளவு 2030 ஆம் ஆண்டில் 2661,000 ஆக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது. அப்போது முஸ்லிம்கள் மொத்த சனத்தொகையில் 6.9 வீதமாக இருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேட்டா, மெனிடோபா, நொவாஸ் கோட்டியா,சார்ஸ்கச்சவான், நியூபிரன்ஸ்பிக், நியூபோன்ட்லேன்ட், பிரின்ஸ் எட்வேர்ட் ஐலேன்ட், வடமேற்குப் பிராந்தியங்கள், யூகோன், நூனாவுத் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம் சனத்தொகை இறங்குவரிசையில் அமைந்துள்ளது.

கிழக்காபிரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் சோமாலியா, எதியோப்பிய நாட்டவர்கள் குறைந்தளவில் வாழ்கின்றனர்.

1970 களிலும் 80 களிலும் கனேடிய முஸ்லிம்களின் பொருளாதாரம் பாரிய முன்னேற்றம் கண்டிருந்தது. பெரும்பாலான முஸ்லிம்கள் பொருளாதார வசதி படைத்தவர்களாக இருந்தனர். எனினும், செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா போன்று கனடாவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்தன.

ஒன்டாரியோ போன்ற கைத்தொழில் பேட்டைகள் நிரம்பிய நகரிலேயே முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றனர். அவர்களுள் 20 வீதமானோர் அரசாங்கத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். 150 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

1960 இல் கொண்டு வரப்பட்ட உரிமை மசோதாவின்படி அந்நாட்டின் பல கலாச்சாரத் தன்மை (–Multi-culturalism) அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி இன, மத, நிற, மொழி, கோத்திர வேறுபாடுகளுக்கு எவ்வித அரசியல் பெறுமானங்களும் இல்லை என கொள்கை அளவில் ஒப்புக்கொள் ளப்பட்டது.

கடந்த பல தசாப்தங்களாக கடனாவின் சமூக, அரசியல் வாழ்வில் பல கலாச்சாரத் தன்மை ஒரு முக்கிய தோற்றப்பாடாகவே விளங்கியது. அதன் விளைவாகவே, கணிசமான முஸ்லிம்கள் அரச ஊழியர்களாக மாறினர். பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் பல்வேறு நகரங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன. இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவுமான உரிமை கிடைத்தது. ஆயினும், 9/11 க்குப் பின்னர் அமெரிக்க முஸ்லிம்கள் போன்று கனேடிய முஸ்லிம்களும் அரச தொழிற்துறையில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வித் துறையிலும் பின்னடைந்துள்ளனர். இன, மத பாகுபாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந் துள்ளன.

கனேடிய முஸ்லிம் காங்கிரஸ் வட அமெரிக்க இஸ்லாமிய சபை, கனேடிய முஸ்லிம் சபை,டொரொன்டோ இஸ்லாமிய உதவி நிறுவனம் என பல்வேறு சமூக, கலாச்சார நிறுவனங்கள் கனடாவில் செயல்படுகின்றன. ஒருபுறம் முஸ்லிம்களுக்கு எதிரான புறக்கணிப்பும், பாரபட்சமும் நீடிக்கின்ற அதேவேளை, இஸ்லாத்தின் மீதான கிறிஸ்தவர்களின் கவனம் வெகுவாகத் திரும்பியுள்ளது. இஸ்லாத்தைத் தேடிப்படிக்கும் நிலை உருவாகியுள்ளது. 9/11 க்குப் பின்னரே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இஸ்லாத்தைக் கற்பதற்கான தனியான கல்லூரிகள் இன்று இந்நாட்டில் இயங்கி வருகின்றன.1990 களுக்குப் பின்னரேயே இந்த மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கற்கைகளுக்கான போதனா பீடங்கள் இயங்கி வருகின்றன. கனேடிய முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் பட்டதாரி என மதிப்பிடப்பட்டுள்ளது.

–McGill பல்கலைக்கழகம் மற்றும் டொரொன்டோ பல்கலைக்கழகங்களில் அறபு மொழிக்கென தனியான பீடம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் வனப்பு மிக்க பள்ளிவாயல்கள் கம்பீரமாய் காட்சித் தருகின்றன. 1938 இலேயே அர்ராஷித் எனப்படும் முதற் பள்ளிவாயல் எட்மென்டனில் திறந்து வைக்கப்பட்டது. இதுதரவி 1956 இல் ஸ்தாபிக்கப்பட்ட டொரொன்டோ ஜும்ஆ பள்ளிவாசல், 1970இல் திறந்து வைக்கப்பட்ட பைஸல் பள்ளிவாயல், 1970 இல் ஸ்தாபிக்கப்பட்ட வினிபென் ஜும்ஆ மஸ்ஜித், ஒட்டாவாவில் உள்ள ஜும்ஆ பள்ளிகள் என்பனவும் குறிப்பிடத்தக்கன. இவை அளவில் பெரியனவாகவும், கட்டிடக்கலை நுட்பமுள்ளதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

கனடாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுவதோடு, பல்வேறு இஸ்லாமிய தஃவா ஆளுமைகளையும் அச்சமூகம் கொண்டுள்ளது. வடஅமெரிக்காவில் செயற்படும் மிகப் பெரிய நிறுவனமான வட அமெரிக்க முஸ்லிம் சபையில் (Islamic Society of North America) நூற்றுக்கணக்கான இஸ்லாமிய தஃவா ஆளுமைகளும் அறிஞர்களும் இணைந்துள்ளனர். அவர்களுள் இந்நிறுவனத்தின் தலைவரான இங்கிரித் மெட்ஸன் முக்கியமாவர்.

அதேபோன்று கலாநிதி ஜமால் பதவி கனேடிய முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பிலமாலமான இஸ்லாமிய அறிஞர். எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட பதவி, ஆங்கில மொழியில் கனடாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை நிலை பேராசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

வட அமெரிக்கா போன்று சிறுபான்மையினராக வாழ்ந்தபோதும், நன்கு ஒழங்குபடுத்தப்பட்ட அமைப்பில் கனேடிய முஸ்லிம் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். பொதுவாக கனேடிய முஸ்லிம்கள் தமது இஸ்லாமிய அடையாளத்தை பேணும் அதேவேளை, கனேடிய சமூகத்தோடு இணைந்து வாழ்வதிலும் தேசிய வாழ்வில் பங்கெடுப்பதிலும் ஆர்வமாக உள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s