ஏப்ரல், 2012 க்கான தொகுப்பு


ரமல்லா: எத்தகைய நியாயமான காரணமும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் கைதுசெய்யப்பட்டு, இதுவரை உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் இஸ்ரேலியச் சிறையில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவிக்கும் பலஸ்தீன் கைதிகளில் 12 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை (05.04.2012) பலஸ்தீன் கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கச் சிறை நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராய் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பலஸ்தீன் கைதிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
“ஜெனினைச் சேர்ந்த பிலால் தியாப், அல் ஹலீலைச் சேர்ந்த தாஹிர் ஆகியோர் 38 ஆவது நாளாகவும், நப்லஸைச் சேர்ந்த உமர் அபூ வாதிர் 31 நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல்நலம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேற்படி கைதிகள் உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதால், உடனடியாக ரமல்லா கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


Saeed helping only to de-radicalize the militants : Pakistan

அமெரிக்க அரசால் 10 மில்லியன் டாலர் (சுமார் 50 கோடி ரூபாய்கள்) தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தய்பா மற்றும் ஜமாஅத்துத் தாவா தலைவர் ஹஃபீஸ் சயீத் உண்மையில் தீவிரவாதிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தவே உதவினார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்ட மும்பை 26/11 சம்பவத்தின் சூத்திரதாரி என்று இந்தியா ஹஃபீஸ் சயீதை குறிப்பிட்டிருக்கையில், அதை ஏற்று, அமெரிக்காவும் அவர் தலைக்கு சுமார் 50 கோடி ரூபாய்கள் விலை வைத்திருக்கும் நிலையில், தீவிரவாத எதிர்ப்பு பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உண்மையில் சயீத் அச்சமயம் பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளைச் சந்தித்து தீவிரவாதிகளைத் திருத்துவதற்கே ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறியுள்ளார். தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தும் அந்தச் சேவைக்கு சயீத் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு துப்பறியும் காவல் அதிகாரி ஒருவரும் மேற்கண்ட மைய அரசு அதிகாரியின் கூற்றை உறுதிபடுத்தியுள்ளார். தங்களுடைய அறிவார்ந்த அணுகுமுறையாலும் நடவடிக்கைகளாலும் தீவிரவாதிகள் பலரையும் திருத்தி சட்டத்துக்குட்பட்ட குடிமகன்களாக ஜமாஅத்துத் தாவா மாற்றியது என்றார் அந்த காவல் அதிகாரி.

இதற்கிடையில் “நீதிக்கான வெகுமதி” என்னும் திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு அறிவித்துள்ள சயீத் தலைக்கான வெகுமதி பல மாத ஆய்வுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.

தாம் இந்தியாவுடன் நெருக்கமாகப் போகிறோம் என்பதை பாகிஸ்தானுக்கு அறிவிக்கும் அமெரிக்க யுக்தியே இந்த அறிவிப்பு என்று உலக அரசியல் நோக்கர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 


இஃவானின் கைராத் அல் ஷாத்திர் வேட்புமனு தாக்கல்

கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் கைராத் அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் முழக்கங்களுடன் தேர்தல் கமிஷன் தலைமையகத்திற்கு வந்த ஷாத்திர் தனது பெயரை பதிவுச்செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை ஒப்படைக்க மறுக்கும் ராணுவ அரசின் முடிவை எதிர்த்து, முன்னதாக அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை இஃவான் மாற்றிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து கைராத் அல் ஷாத்திர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே, ஸலஃபி கட்சியான அந்நூர் சார்பாக அதிபர் தேர்தலுக்கு போட்டியிடவிருக்கும் ஷேக் ஹாஷிம் அபூ இஸ்மாயிலை தகுதி இழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அபூ இஸ்மாயிலின் தாயார் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் அவர் தகுதியிழக்கும் வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


Hafiz Saeed

இஸ்லாமாபாத்: அமெரிக்கா எனது தலைக்கு ரூ. 50 கோடி விலை வைத்திருப்பதே ஒரு தீவிரவாதச் செயல்தான். இந்தியாவின் தூண்டுதலால்தான் இவ்வாறு அறிவித்துள்ளது அமெரிக்கா என்று பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவரான ஹபீஸ் முகம்மது சயீத் தெரிவித்துள்ளான்.

லஷ்கர் இ தொய்பாவை நிறுவி பின்னர் அதன் பெயரை ஜமாத் உத் தவா என்று பெயர் மாற்றி செயல்பட்டு வரும் முக்கியத் தீவிரவாதி சயீத். பாகிஸ்தானில்தான் இவன் பதுங்கியுள்ளான். இவன்தான் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையும் ஆவாவன். இவனது தலைக்கு தற்போது அமெரிக்கா ரூ. 50 கோடி விலை வைத்துள்ளது.

பாகிஸ்தானில் பத்திரமாக இருந்து வரும் சயீத்துக்கு இவ்வளவு பெரிய விலையை அமெரிக்கா வைத்திருப்பது பாகிஸ்தான் அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சயீத் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில், இந்தியாவின் தூண்டுதலின்பேரில்தான் இவ்வாறு அறிவித்துள்ளது அமெரிக்கா. இதுவே ஒரு தீவிரவாத செயல்தான். ஒருவரின் தலைக்கு விலை வைப்பது என்பதும் கூட ஒரு வகையில் தீவிரவாத செயல்தான்.

இந்தியாவுக்காக இதைச் செய்கிறது அமெரிக்கா. இப்படிச் செய்வதன் மூலம் எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறது.

ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் நேட்டோ படையினரின் வாகனங்கள், உணவு சப்ளை உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும் என்று நான் பாகிஸ்தான் அரசை தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன், போராடி வருகிறேன். இதனால்தான் என் மீது பழிவாங்கும வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

எங்களது இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. இது அமெரிக்காவை அச்சுறுத்துவதாக உள்ளது என்றார் சயீத்.


நப்லஸ்: கடந்த மார்ச் மாதத்தில் நப்லஸ் பிராந்தியத்தில் மட்டும் 11 குழந்தைகள் உட்பட 38 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்கான தாடமன் அமைப்பு வியாழக்கிழமை (05.04.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பிராந்தியத்தினுள் அடிக்கடி அத்துமீறி நுழையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடின்றி, பலஸ்தீன் பொதுமக்களைக் கடத்திச் சென்று வதைமுகாம்களில் தடுத்துவைப்பதை வழமையாகக் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் கடத்திச் செல்லப்பட்டவர்களுள் பக்கவாத நோயாளி ஒருவரும் அடங்குவார். உத்மான் கலீலி எனப்படும் அந்தப் பலஸ்தீனர், ஆறு வருடங்களுக்கு முன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைச் சிப்பாயினால் முதுகு முள்ளந்தண்டைக் குறிவைத்துச் சுடப்பட்டதில் பக்கவாத நோயாளியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் மேற்குக்கரைப் பிராந்தியத்தில் மட்டும் வயது வேறுபாடுகளுக்கு அப்பால் 7 பெண்கள், 56 சிறுவர்கள் உள்ளிட்டு 300க்கும் அதிகமான பலஸ்தீன் பொதுமக்கள் ஆக்கிரமிப்புப் படையினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


ஹைதராபாத்: ஆந்திர வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான 1654 ஏக்கர் நிலம் முறைகேடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த நில வழக்கு தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ஃப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்தன அந்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய அமர்வு 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளதாக வக்ஃப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.

இவற்றில் லான்கோ நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது கட்டுமான பணியை முடித்து விட்டன மேலும் அரசு ஒதுக்கிய அந்த இடங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் லான்கோ நிறுவனமும் தாங்கள் அந்த இடத்தை முறையாக அரசிடமிருந்து வாங்கியதாக வாதாடியது. ஆனால் உயர்நீதிமன்றம் அனைத்து இடங்களும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து வக்ஃப் வாரியத்தின் தலைவர் சையது குலாம் தெரிவிக்கையில் தாங்கள் இறைவன் அருளால் வெற்றி பெற்றுவிட்டோம் மேலும் இனி வக்ஃப் நிலங்களை குறித்து அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும் இனி அரசு இதுபோல் வக்ஃப் நிலத்தில் முறைகேடு செய்ய துணியாது என்றும் மசூத் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Egypt's Muslim Brotherhood names Khairat al-Shater as presidential

கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது.

துவக்கத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இஃவானுல் முஸ்லிமீன் முடிவு எடுத்தது. ஆனால், ராணுவ அரசு இஃவானுல் முஸ்லிமீனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியது.

ராணுவத்தின் எதேச்சதிகார போக்கை கண்டித்து தனது முடிவை மறுபரிசீலனைச் செய்த இஃவான், அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்தது.

அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன் சரியான நபரை தேர்வுச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்ற காரணத்தால் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசு 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைராத் அல் ஷாதிர் முபாரக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைச் செய்யப்பட்டார்.