ஆசிட் வீச்சால் பார்வை இழந்த பெண்ணுக்கு, முகநூல் குழு நிதி உதவி!

Posted: பிப்ரவரி 5, 2013 in NEWS

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆசிட் வீச்சால் பார்வை இழந்த இன்ஜினியர் பெண்ணுக்கு, வெல்கம் டூ காரைக்கால் பேஸ்புக் குழு இன்று நிதி உதவி வழங்கியது.
காரைக்கால் எம்.எம்.ஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் வினோதினி (23). வினோதினி சென்னை தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். வினோதினி வீட்டுக்கு பல வகையில் உதவி வந்த திருவேட்டக்குடியைச் சேர்ந்த அப்பு என்கிற சுரேஷ் (28) வினோதினியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தாக தெரிகிறது.
சுரேஷின் காதலை வினோதினி நிராகரித்ததால், கோபம் அடைந்த சுரேஷ், கடந்த நவம்பர் 14-ந் தேதி வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் வினோதினி கடுமையாக பாதிக்கப்பட்டு இரு கண்களையும் இழந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வினோதினியின் தொடர் சிகிசைக்கு, மத்திய அரசு ரூ.3 லட்சமும், புதுச்சேரி அரசு ரூ.2 லட்சமும், தன்னார்வலர்கள் சிலர் நிதியும் வழங்கிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வெல்கம் டூ காரைக்கால் பேஸ்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள், சிங்கப்பூரில் உள்ள நண்பர்களிடம் முஹம்மது ஜெக்கரியா மரைக்கான் வசூல் செய்த ரூ.32,500-க்கான காசோலையை, காரைக்காலில் உள்ள கியாசுதீன், கமாலுதீன், ஹசன் மரைக்கான், மாலிக், காமில் அஹமது ஆகியோர் இன்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அசோக்குமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினர்.

மேலும் காசோலையை வழங்கியவர்கள் கூறும்போது, “இந்த தொகை சிறியதாக இருந்தபோதிலும் முதன்முதலில் வெல்கம் டூ காரைக்கால் பேஸ்புக் குழும நண்பர்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
இந்த முயற்சியை மேற்கொண்டவரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் பிற ஊர்களை சார்ந்தவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது. உதவி செய்ய மனம் ஒன்றே போதும்; இடம், மதம் எதுவும் தேவை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது” என்றனர்.

Read more about ஆசிட் வீச்சால் பார்வை இழந்த பெண்ணுக்கு, முகநூல் குழு நிதி உதவி! [8729] | தமிழக செய்திகள் | செய்திகள் at http://www.inneram.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s