யார் சிறார்(ஜுவனைல்)? மறுபரிசீலனைச் செய்கிறது உச்சநீதிமன்றம்!

Posted: பிப்ரவரி 5, 2013 in NEWS

புதுடெல்லி:இளஞ்சிறார் குற்றத் தடுப்புச் சட்டத்தில் ‘சிறார்’(ஜூவனைல்) என்ற வார்த்தையின் விளக்கம், அதன் கீழ் வரும் நபரின் வயது வரம்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடிவு செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியது.

டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கமல்குமார் பாண்டே, சுகுமார் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலித்தது. அப்போது ஆஜரான மனுதாரர்களான இரு வழக்குரைஞர்கள் கூறியது:

“இளஞ்சிறார் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 2(கே), 10, 17 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிறாரின் வயதுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 82,83 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கும் முரண்பாடு காணப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 82-ஆவது பிரிவில், “ஏழு வயதுக்கு உள்பட்ட சிறாரின் தவற்றைக் குற்றமாகக் கருதக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. 83-ஆவது பிரிவில், “ஏழு வயதுக்கு மேல், பன்னிரண்டு வயதுக்கு உள்பட்ட முதிர்ச்சி அடையாத சிறாருக்கு, தான் என்ன செய்கிறோம் என்பதே புரியாத நிலையில் அதைக் குற்றமாகக் கருதக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு பிரிவுகளுக்கும் முரணாக, இளஞ்சிறார் குற்றத் தடுப்புச் சட்டத்தில், “18 வயதுவரை உள்ளவர் சிறார் ஆக கருதப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளைக் களைய “சிறார்’ என்பவரின் வயது வரம்பு எது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி ஆட்சேபம் தெரிவித்தார். “மனுதாரர்கள் சட்டத்துக்கே கேள்வி விடுக்க முயற்சிக்கின்றனர். அதை அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் முன்பு இந்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் கூறியது: “இந்த விவகாரத்தில் மாநில அரசுகளையோ அரசு சாரா நிறுவனங்களையோ கருத்து கேட்க விரும்பவில்லை. மனுதாரர்கள் சட்டத்தை எதிர்க்கவில்லை; அதில் முரண்பாடு தோன்றும் வகையில் இடம்பெற்றுள்ள சிறாரின் வயது வரம்பு என்ன என்பதைத்தான் தெளிவுபடுத்தக் கோருகின்றனர். அதனால், இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறாரின் வயது வரம்பு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் முடிவு செய்கிறது. இந்த மனு மீதான நீதிமன்றத்தின் விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும். இந்த மனு குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டாலும் அதை அட்டர்னி ஜெனரல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதிகள் கூறினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s