அப்சல் குரு தூக்கு – த.மு.மு.க கண்டன ஆர்பாட்டம்!

Posted: பிப்ரவரி 11, 2013 in SDPI

அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டதை கண்டித்து இன்று மாலை த.மு.மு.க கண்டன ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:
இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.
அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தூக்கு தண்டனையை கண்டித்து வரும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக, மமக, மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பங்குபெறும் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s