Archive for the ‘SDPI’ Category


ரெயில்வே துறையால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதை கண்டித்து வரும் 22 ம் தேதி சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

மாவட்ட மாநாடுகள் மற்றும் மாநில ,தேசிய நிர்வாகிகள் தேர்தல்:

எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின் வருகிற 2 வருடங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல், கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வருகிறது.இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக நடந்து முடிந்து விடும் .தொடர்ந்து அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் திருச்சியில் கட்சியின் மாநில பொது குழு நடைபெற உள்ளது .அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர்.தொடர்ந்து மார்ச் 30 இல் கட்சியின் தேசிய பொது குழு கோவையில் நடைபெற உள்ளது.இதில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில்எஸ்.டி.பி.ஐ கட்சி மிக வேகமாக, வீரியமாக வளர்ந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்வேறு தரப்பினரும், பலவேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியில் ஆர்வத்துடன் இணைத்து வருகின்றனர். கட்சியின் வளர்ச்சியினுடைய ஒரு பகுதியாக வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.நெல்லையிலும், மதுரையிலும் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இராமநாதபுரத்தில் வருகிற 23 ஆம் தேதியும் , திருச்சியில் அடுத்த மாதம் 10ம் தேதியும் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு வரும் மார்ச் 31ம் தேதி வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக இதில் கலந்து கொள்ள உள்ளனர் .பூரண மதுவிலக்கை அமல்படுத்து, தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்திடு, சிறு குறு தொழில்களை பாதுகாத்திடு,7 வருடம் சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திடு, லஞ்சம் ஊழல்களுக்கு எதிராக அணிதிரள்வோம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற உள்ளது .அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அப்சல் குரு பிரச்னையை திசை திருப்பவே நான்கு தமிழர்களின் கருணை மனு நிராகரிப்பு:

அப்சல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட விதமும் அநியாயமானது.பாரதிய ஜனதாவை எதிர் கொள்ளவே இந்த தண்டனை நிறைவேற்றம் நடைபெற்று உள்ளது . இதனால் ஏற்பட்டுள்ள விவாதங்களை மறைக்கவே நான்கு தமிழர்களின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அரசியல் காரணங்களுக்காகவே இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தூக்குத் தண்டனையை அரசியலுக்காக பயன்படுத்துகிறது.

26 ல் சேலம் விவசாயிகளின் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு:

கொச்சி முதல் பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களின் நிலங்கள் கைவசப்படுத்துவதாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் பதிக்கப்படும் குழாய்களுக்கான பாதுகாப்பை நில உரிமையாளர்கள் மீது சுமத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. விவசாயிகளை அச்சுறுத்துவதையும் உரிய நிவாரணம் இன்றி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.எனவே விவசாயிகளின் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது.வரும் 26 ம் தேதி சேலத்தில் நடைபெறும் கெயில் நிறுவன முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கிறது.

ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதை கண்டித்து பிப்ரவரி -22 இல் இரயில் மறியல்:

தொடர்ந்து இரயில்வே துறை தமிழகத்தை புறக்கணித்து வருகிறது . தமிழக திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை .இதை கண்டித்தும் ,வரும் இரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய இரயில்களுக்கான அறிவிப்பையும் , அதிக நிதி ஒதுக்கீட்டையும் தமிழகத்திற்கு அளிக்க வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வரும் 22 ம் தேதி சென்னையில் எனது தலைமையிலும் , நெல்லையில் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமையிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநிலத் துணை தலைவர் பிலால் ஹாஜியார் ,மாநில செயலாளர் V.M அபுதாகிர்,மாநில செயற்குழு உறுப்பினர் நிஜாம் முகைதீன் ,கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா,துணைத்தலைவர் அன்சர்,பொதுச்செயலாளர் அப்துல் காதர்,SDTU மாநில செயலாளர் அப்துல் கரீம், SDTU மாவட்ட தலைவர் அஸ்ரப் ஆகியோர் உடன் இருந்தனர் .


sdpi

திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (12.02.2013)நடைபெற்றது .

மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.


அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டதை கண்டித்து இன்று மாலை த.மு.மு.க கண்டன ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:
இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.
அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தூக்கு தண்டனையை கண்டித்து வரும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக, மமக, மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பங்குபெறும் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து ,இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் .மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது பங்கேற்கிறார்.
இதுகுறித்த அக்கட்சியின் அறிவிப்பில்:
.”பெரும் (உயிர்)இழப்புகளுக்குக் காரணமான இச்சம்பவம் தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளிக்கு மரணதண்டனை அழிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த முடியும்” என்கிறது உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு.
நமது இந்திய தண்டனைச் சட்டத்தில், இப்படிக் காரணம் சொல்லி ஒருவரைத் தூக்கில் போடலாம் என்று எங்கேயும் சொல்லிடவில்லை என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.ஆனால் இந்திய தண்டனை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு அஃப்சல்குரு ரகசியமாக தூக்கிலடப்பட்டார்.அவரது குடும்பத்தினருக்கு கூட இது தெரியப்படுத்தப்பட வில்லை.
இது ஆபத்தான முடிவு.நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்.அஃப்சல் குருவை தூக்கிலிட்டது வன்மையாக கண்டிக்கதக்கது.
எனவே அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்தும்,இனி வரும் காலங்களில் இது போன்ற தவறான முடிவு நடைபெறக்கூடாது என்பதனை வலியுருத்தியும்,அனைத்து கட்சிகளின் சார்பாக நாளை திங்கள்கிழமை 11-02-2013 மாலை 4மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொள்கிறார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும்,மனித உரிமையை பாதுகாக்கவும்,மனித உரிமைக்காக போராடும் அனைத்து நல்லுள்ளங்களும்,ஊடக,பத்திரிக்கை நண்பர்களும்,சமூக ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.


sdpi

புதுடெல்லி:முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைத்து முக்கிய அரசியல் கட்சிகள் நடத்தும் மோசடிக்கு எதிராக போராட்ட அரசியலுடன் ஹிந்தியின் இதய பூமியான உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவும் களமிறங்கியுள்ளது. கூட்டணி கட்சியான அம்பேத்கர் சமாஜ் பார்டியும், எஸ்.டி.பி.ஐயும் இணைந்து 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை வாக்குவங்கியாக மட்டுமே கருதிவரும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் மோசடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம் நடத்திவருகிறது. ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை உமிழும் பா.ஜ.கவை எதிர்ப்பதுடன், பா.ஜ.கவை காட்டி முஸ்லிம்களை அச்சமூட்டி தங்களுக்கு ஆதரவாக மாற்றும் அரசியலையும் எஸ்.டி.பி.ஐ எதிர்க்கிறது.

முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தலித்-பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்தையும் நோக்கமாக கொண்டு பிரச்சாரம் நடந்துவருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களும், தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செய்தியை எஸ்.டி.பி.ஐ அளித்துவருகிறது.

எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன் அஹ்மத் போட்டியிடும் கான்பூர் மாவட்டத்தில் ஆர்யா நகர் தொகுதியில் தீவிரமான பிரச்சாரம் நடைபெறுகிறது.

முஸ்லிம் வாக்குகள் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் தேவ்பந்த் தொகுதியில் மவ்லானா மஸ்ஊதும், திஜிநூர் தாம்பூர் தொகுதியில் அப்துல் காலிதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள். பட்ரோணாவில் முஹ்யத்தீன் சித்தீகி, ராம்பூர் மனிஹராவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பல்வந்த்சிங் சார்வாக், கான்பூர் ஸீஸாமில் ஷக்கீல் அஹ்மது முஹம்மதி, ஷாமிபூரில் ஷஃபாத் கான், முஸாஃபர் நகர் புதானாவில் மவ்லானா ஷக்தாப், முராதாபாத் டாக்கூர் துவாராவில் ரயீஸ் அஹ்மத் ஆகியோர் கடும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநில தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், வளர்ச்சிக்காக உ.பியை நான்காக பிரிக்கவேண்டும், சிறுபான்மை கல்வியை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும், குடிசை தொழிலுக்கு ஊக்கமளிக்க வேண்டும், பாரம்பரிய தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், போலி என்கவுண்டர் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை தேர்தல் களத்தில் முன்வைத்துள்ளது.


லிலாங்:சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த தேர்தல் பிரச்சாரக் குழு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மணிப்பூர் லிலாங் தொகுதியில் போட்டியிடும் முஹம்மத் ஹாலித் தனது பிரச்சாரத்தை துவக்கியது.

இந்த பிரச்சாரத்தில் 3000-க்கும் manipur rallyமேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். சுமார் காலை 11-மணி அளவில் தொடங்கிய இந்த பிரச்சாரத்தில் 200 இரு சக்கர வாகனங்கள், 30 ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் 20-கார்கள் பங்கேற்க இந்த பிரச்சார பேரணி லிலாங் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றது.

இந்த தேர்தல் பிரச்சார பேரணியை வரவேற்க மக்கள் வெள்ளம் சாலையோரம் இருபுறம்மும் திரண்டு நின்றனர். பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் “ஊழலை நிறுத்துவோம், உரிமைக்காக சண்டையிடுவோம்” என்று கோசம் எழுப்பினர்.

பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்களை வரவேற்க திறந்தவெளி ஜீப்பில் வேட்பாளர் முஹம்மது ஹாலித் மற்றும் மாநில செயலாளர் முஹம்மது ரபிசுத்தின் ஷா அவர்களும் கூட்டத்தை வலம் வந்தனர்.

மேலும் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் ஹாலித், இன்று நாங்கள் லிலாங் தொகுதியின் அனைத்து மூளை, முடுக்கையும் பார்வையிட்டோம், எங்கள் பிரச்சினைகளை சரி செய்வார்கள் என்று நம்பி ஓட்டு போட்டோம், ஆனால் இன்று வரை இந்ததொகுதியில் எந்த வித மாறுபாடும் இல்லை. வெகு விரைவில் புதிய மாற்றத்தை இந்த தொகுதியில் உண்டாக்குவோம் என்று எழுச்சிமிக்க உரையை பிரச்சாரத்தில் ஹாலித் முன் வைத்தார்.


This slideshow requires JavaScript.

திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை ஏழு பேர் வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில் அவர்களுக்கு உதவி செய்தனர்.