மாஸ்கோ: மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பின்போது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கின, பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.

இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. இதில் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மீது விழ இருந்த பெரிய எரிகல்லை அந் நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதில் அது சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.


sdpi

திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (12.02.2013)நடைபெற்றது .

மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

படம்  —  Posted: பிப்ரவரி 13, 2013 in SDPI


vinodhini
சென்னை: ஒருதலைக்காதலால் ஆசிட் வீச்சுக்குள்ளான காரைக்கால் சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தவன் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். கடந்த தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது சுரேஸ் ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான். அவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கான். இதில் கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த சில மாதங்களாக வினோதினி சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி உயிரிழந்தார்.

படம்  —  Posted: பிப்ரவரி 12, 2013 in POPULAR FRONT


அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டதை கண்டித்து இன்று மாலை த.மு.மு.க கண்டன ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:
இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.
அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தூக்கு தண்டனையை கண்டித்து வரும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக, மமக, மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பங்குபெறும் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து ,இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் .மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது பங்கேற்கிறார்.
இதுகுறித்த அக்கட்சியின் அறிவிப்பில்:
.”பெரும் (உயிர்)இழப்புகளுக்குக் காரணமான இச்சம்பவம் தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளிக்கு மரணதண்டனை அழிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த முடியும்” என்கிறது உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு.
நமது இந்திய தண்டனைச் சட்டத்தில், இப்படிக் காரணம் சொல்லி ஒருவரைத் தூக்கில் போடலாம் என்று எங்கேயும் சொல்லிடவில்லை என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.ஆனால் இந்திய தண்டனை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு அஃப்சல்குரு ரகசியமாக தூக்கிலடப்பட்டார்.அவரது குடும்பத்தினருக்கு கூட இது தெரியப்படுத்தப்பட வில்லை.
இது ஆபத்தான முடிவு.நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்.அஃப்சல் குருவை தூக்கிலிட்டது வன்மையாக கண்டிக்கதக்கது.
எனவே அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்தும்,இனி வரும் காலங்களில் இது போன்ற தவறான முடிவு நடைபெறக்கூடாது என்பதனை வலியுருத்தியும்,அனைத்து கட்சிகளின் சார்பாக நாளை திங்கள்கிழமை 11-02-2013 மாலை 4மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொள்கிறார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும்,மனித உரிமையை பாதுகாக்கவும்,மனித உரிமைக்காக போராடும் அனைத்து நல்லுள்ளங்களும்,ஊடக,பத்திரிக்கை நண்பர்களும்,சமூக ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.


அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தற்போது அலகாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம் பக்தர்களும் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்த கும்பமேளாவுக்கு வந்து கூட்ட நெரிசலில் காணாமல் போனோரை பற்றி ஒலி பெருக்கி மூலம் அறிவித்து குடும்பத்தினருடன் இணைத்து வைக்க உதவி மையங்கள் அலகாபாத் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்கள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்த உதவி மையங்கள் தெரிவித்திருக்கும் தகவலின்படி இதுவரை 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர். மவுனி அமாவாசை நாளான நேற்று மட்டும் சுமார் 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இவர்களில் 97 ஆயிரம் பேர் காணவில்லை. இப்படி கும்பமேளா காலங்களில் இதுவரை தொலைந்தோர் எண்ணிக்கை சுமார் 16 லட்சம் பேர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இன்னும் பலர், கும்பமேளா நடைபெறும் புண்ணிய தலங்களில் தங்கள் வீட்டு முதியவர்களை கொண்டுவந்து விட்டு விடும் சம்பவங்களும் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.


இலங்கை : முஸ்லீம்களை கேவலப் படுத்தி காட்சிகள் அமைக்கப் பட்டதாக முஸ்லீம் அமைப்புகள் போர்க் கொடி தூக்கியதை அடுத்து தமிழகம், இலங்கை,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் சமாதானப் பேச்சு வார்த்தையை அடுத்து சில காட்சிகள் நீக்கப் பட்டு தமிழகத்தில் கடந்த 7 அன்று விஸ்வரூபம் வெளியானது. இந்நிலையில் இலங்கையிலும் விஸ்வரூபம் திரைப் படத்துக்கு தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்துக்கான தடை நீக்கப்பட்டதால் இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.